முட்டை மசாலா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வேக வைத்த முட்டை - 4 எண்ணம்
2. வெங்காயம் - 3 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. மிளகாய் - 2 எண்ணம்
5. மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
6. மல்லித் தூள் -1 மேசைக்கரண்டி
7. மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி
8. கடுகு -1 தேக்கரண்டி
9. உளுந்தம் பருப்பு -1 தேக்கரண்டி
10. இஞ்சி - சிறிது
11. பூண்டு -7 பற்கள்
12. உப்பு -தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
14. கறிவேப்பிலை, மல்லித்தழை - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியை நீளமாகவும், மிளகாயை கீறியும், பூண்டை வட்டமாகவும், இஞ்சியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
2. வேக வைத்த முட்டையை இலேசாகக் கீறிக் கொள்ளவும்.
3. அகன்ற பாத்திரத்தில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து, அது வதங்கிய பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் மிளகாய், தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி கரைந்த பின்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூளைச் சேர்த்துக் கிளறி, சிறிது தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் லேசாக கொதிக்க விடவும்.
5. பின்பு, தேவையான உப்பு மற்றும் முட்டைகளைச் சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேக விட வேண்டும்.
6. பின்னர், அதில் தண்ணீர் வற்றி முட்டையும், மசாலா கலவையும் சேர்ந்தவுடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி விட வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.