முட்டை வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 4 எண்ணம்
2. சின்ன வெங்காயம் – 50 கிராம்
3. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
4. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
6. கறிவேப்பிலை - சிறிது
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முட்டையை வேக வைத்துப் பாதியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை முட்டையின் மேல் தடவி அரை மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
3. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி முட்டையை வரிசையாக வைத்து மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.
4. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
5. வறுத்து வைத்துள்ள முட்டையை எடுத்து இந்தக் கலவையில் போட்டு மிதமாக கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.