உருளைக் கிழங்கு - முட்டை ஆம்லெட்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக் கிழங்கு -350 கிராம்
2. முட்டை-7 எண்ணம்
3. சோயா சாஸ் -3 தேக்கரண்டி
4. நல்லெண்ணெய் -1தேக்கரண்டி
5. மிளகு -1தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் -1தேக்கரண்டி
7. வெங்காயம் -1 எண்ணம்
8. பச்சை மிளகாய்-2 எண்ணம்
9. பூண்டு-2 பல்
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக் கிழங்கை அவித்துத் தோலை உரித்து வட்டமாக வெட்டவும்.
2. பூண்டு, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சோயா சாஸ், நல்லெண்ணெய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டிய உருளைக் கிழங்கைப் போட்டுப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
5. பின்னர் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
6. முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக் கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
7. இந்தக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட்டாகப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.