முட்டை பஜ்ஜி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 5 எண்ணம்
2. கடலை மாவு - 200 கிராம்
3. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. முட்டையை வேக வைத்து, முட்டையின் ஓட்டை நீக்கி அதை நீளவாக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, அதில் தண்ணீர் ஊற்றிப் பஜ்ஜி மாவுப் பதத்திற்குச் சிறிது கெட்டியாகப் பிசையவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
4. நறுக்கி வைத்திருக்கும் முட்டையை கடலை மாவில் மூழ்க வைத்து, அதைக் காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.