முட்டை பொடி வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அவித்த முட்டை - 5 எண்ணம்
நல்லெண்ணெய் - 30 மி.லி
வெங்காயம் - 50 கிராம்
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
கருவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
செய்முறை:
1. வற்றல், சீரகம், உளுந்தம் பருப்பு கருவேப்பிலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுக்கவும்.
2. இத்துடன் மஞ்சள்தூள், உப்புத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
3. அவித்து வைத்திருக்கும் முட்டையை நீளவாக்கில் கத்தி கொண்டு கீறிவிடவும். கீறிய முட்டைக்குள் ஏற்கனவே செய்து வைத்த பொடியை வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பின் அதில் கீறல் செய்து பொடி வைத்திருக்கும் மல்லித்தழை மற்றும் முட்டையைப் போட்டு இலேசாகப் புரட்டி எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.