முட்டை கிரேவி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. முட்டை – 6 எண்ணம்
2. வெங்காயம் – 3 எண்ணம்
3. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
4. புளிச்சாறு – 2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
6. உப்பு – தேவையான அளவு
7. எண்ணெய் – தேவையான அளவு
8. மல்லித்தழை – சிறிது
செய்முறை:
1. முட்டையை வேகவைத்து ஓடை நீக்கி வைக்கவும்.
2. வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
4. அதில் புளிச்சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, தீயை குறைவாக வைத்துச் சில நிமிடம் வதக்கி விடவும்.
5. இந்தக் கலவையானது நல்ல பதத்திற்கு வந்ததும், அதனை இறக்கி, முட்டையை இரண்டாகக் கீறி வாணலியில் வைத்து, முட்டையின் மேல் அந்த கலவை நன்றாகப் படும்படி பிரட்டி, அதன் மேல் மல்லித்தழையினைத் தூவிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.