சில்லி முட்டை
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வேக வைத்த முட்டை – 5 எண்ணம்
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
3. இஞ்சிப் பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
4. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
5. மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
7. புளிக்கரைசல் – 1 தேக்கரண்டி
8. எண்ணெய் – தேவையான அளவு
9. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வேக வைத்த முட்டைகளைத் தோலுரித்து எடுத்து, அவற்றின் மேல் முள் கரண்டியால் குத்தி விடவும்.
2. வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் இஞ்சிப் பூண்டு விழுது, வெங்காயம் போன்றவற்றை போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்னர், அதில் மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், புளிக்கரைசல், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. அதன் பிறகு, அரை கப் கொதி தண்ணீர் ஊற்றி, சர்க்கரை, மஞ்சள்தூள், போட்டு கடைசியாக குழம்பில் அவித்த முட்டைகளைப் போட வேண்டும்.
6. குழம்பு நன்றாகக் கெட்டிப்படும் வரை குறைந்த நெருப்பில் வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.