முட்டை பஜ்ஜி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அவித்த முட்டை - 4 எண்ணம்
கடலை மாவு - 300 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
ந.எண்ணெய் - 200 மிலி
சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. அவித்த முட்டையை நீளவாக்கில் நான்காக வெட்டி வைக்கவும்.
2. கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோடாப்பு, மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி போடும் அளவிற்கு மாவாகக் கரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும், முட்டைத் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.
குறிப்புகள்:
1. முட்டையின் மஞ்சள் கரு பகுதியில் மிளகுத்தூளில் தோய்த்தால் நன்றாக இருக்கும்.
2. முழு அவித்த முட்டையைப் பஜ்ஜி மாவில் தோய்த்துப் போட்டால் முட்டை போண்டாவாகி விடும். இந்த முட்டை போண்டாவை நான்காக நீளவாக்கில் கீறி அதனுள் தேவையான மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.