காளான் ஆம்லெட்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. முட்டை – 2 எண்ணம்
2. மொட்டுக் காளான்கள் (நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
3. சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 5 எண்ணம்
4. உப்பு - தேவையான அளவு
5. வெள்ளை மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
6. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
7. கடுகுத்தூள் - சிறிது
செய்முறை:
1. முட்டையுடன், உப்பு, மிளகுத்தூள், கடுகுத்தூள் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
2. ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி அதனுடன் கழுவி, நறுக்கி வைத்திருந்த காளான்களைப் போட்டுச் சூடுபடுத்தவும்.
3. காளான்களை 2 நிமிடங்கள் வரை வெண்ணெயில் வதக்கவும். பின் அதை தனியாக எடுத்து வைக்கவும்.
4. மீதமுள்ள வெண்ணெயைக் கடாயில் போட்டு, மிதமான தீயில் வைத்து அடித்து வைத்திருந்த முட்டையை ஊற்றவும்.
5. சமமாக கடாயின் மேல பரப்பி காளான்களை மேலேப் போடவும்.
6. ஒரு பகுதி வெந்தவுடன் ஆம்லெட்டை மெதுவாக மரக்கரண்டியில் பாதியாகச் சுருட்ட வேண்டும்.
7. அடுப்பில் இருந்து இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.