கார முட்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 2 எண்ணம்
2. பூண்டு - 2 பற்கள்
3. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
4. புளி - சிறிது
5. எண்ணெய் - தேவையான அளவு
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் முட்டைகளைப் போட்டு நன்கு வேக வைக்கவும்.
2. பூண்டு, மிளகாய் வற்றல் என இரண்டையும் நன்கு நறுக்கி வைக்கவும்.
3. நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் மிளகாயுடன் சிறிதளவு உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பொடியாகக் கலக்கிக் கொள்ளவும்.
4. புளியைச் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
4. அவித்து வைத்திருக்கும் முட்டையை எடுத்துச் சிறிதாக கீறி, அதனுள் தயாரித்துவைத்திருக்கும் காரப் பொடியைச் சேர்த்து, சிறிது புளிக்கரைசலைச் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.