முட்டை பொடிமாஸ்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 4 எண்ணம்
2. பூண்டு – 4 பற்கள்
3. மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணெய் அல்லது வெண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. பூண்டினை மிகவும் பொடியாக வெட்டி கொள்ளவும்.
2.முட்டையை உடைத்து மிளகு தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
3. ஒரு நாண் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டினை போட்டு வதக்கவும்.
4.பிறகு அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக கிளறிவிடவும். அடிக்கடி கிளறிவிட்டு 2 அல்லது 3 நிமிடம் வேகவிடவும்.
5.எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.
குறிப்புகள்:
1. எண்ணெய்யைக் காட்டிலும் வெண்ணெய் சேர்த்து இறக்கினால் நன்றாக இருக்கும். வெண்ணெய் கிடைக்காதவர்கள், அதன் வாசனை பிடிக்காதவர்கள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.