முட்டைக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோழி முட்டை - 6
2. பெரிய வெங்காயம் - 1
3. நல்லெண்ணெய் - 50 மி.லி
4. கடுகு உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
5. தக்காளி - 1
6. பச்சை மிளகாய் - 2
7. பூண்டு - 10 கிராம்
8. மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
9. மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
10. மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
11. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
12. கரம் மசாலாத்தூள் - 1/4 தேக்கரண்டி
13. பெருஞ்சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
14. கருவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
15. தேங்காய்த் துருவல் - சிறிது
முன் குறிப்புகள்
1.1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு இவைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. தேங்காய் துருவலுடன் பெருஞ்சீரகத் தூளைச் சேர்த்துப் பசை போன்று அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
1. அடுப்பில் சமையல் பாத்திரத்தை வைத்து 50 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்.
2. எண்ணெய் நன்றாகக் காய்ந்தவுடன் கடுகு உளுந்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
3. நறுக்கி வைத்த பூண்டின் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. கருவேப்பிளை மற்றும் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
5. நறுக்கி வைத்த தக்காளி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்றாக வதக்கவும்.
6. அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் போன்றவைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
7. அதில் அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றித் தேயையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டுப் பாத்திரத்தை மூடிச் சுமார் 10 நிமிடம் வரை மிதமான நெருப்பில் கொதிக்க விடவும்.
8. அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பசையுடன் சிறிது தண்ணீர் கலந்து ஊற்றி நன்றாகக் கிளறி விட்டுப் பாத்திரத்தை மூடி 5 நிமிடம் வரை மிதமான தீயில் வைக்கவும்.
9. பிறகு கோழி முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து குழம்பில் போடவும். முட்டை ஒன்றோடு ஓன்று சேராமல் பார்த்துக் கொள்ளவும்.
10. மிகவும் சிறிய தீயில் 5 நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
11. இறுதியாக கருவேப்பிலை மற்றும் மல்லிதழை சிறிது போட்டுக் குழம்பை இறக்கவும்.
குறிப்புகள்:
சாதம் மற்றும் சப்பாத்தி போன்றவைகளுக்கு இந்த முட்டைக் குழம்பு மிகச் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.