முட்டைக் கறி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டை – 4 எண்ணம்.
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்.
3. தக்காளி – 3 எண்ணம்.
4. இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு.
5. உப்பு – தேவையான அளவு.
6. எண்ணெய் – தேவையான அளவு.
7. மிளகாய்த் தூள் – தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
3. வெங்காயம் இலேசாக வதங்கியவுடன் அதில் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
4. அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டைகளையும் அதில் உடைத்து ஊற்றவும்.
5. தீயின் அளவைக் குறைத்து வைத்து முட்டை அடிப்பிடித்து விடாமல் தொடர்ந்து கிளறவும்.
6. முட்டை நன்றாக வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.
குறிப்புகள்:
பூரி, சப்பாத்தி போன்றவைகளுக்கு இந்த முட்டைக் கறி சிறப்பாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.