மீன் புட்டு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சீலா மீன்- 250 கிராம் (முள் அதிகமில்லாத மீன் எதுவாகவும் இருக்கலாம்)
2. இஞ்சி- சிறியது
3. வெங்காயம்- 10 எண்ணம்
4. பச்சை மிளகாய்- 5 எண்ணம்
5. பூண்டு- 4 பல்
6. கடுகு, உளுந்து- - தேவையான அளவு
7. உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
1. மீனை நன்றாக வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
2. இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டுத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
4. அதன்பிறகு அதில் உதிர்த்து வைத்த மீனைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.