இறால் மீன் வதக்கல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. இறால் - 1/2 கிலோ
2. சீரகம் - 1/4 தேக்கரண்டி
3. கடுகு - 1/4 தேக்கரண்டி
4. தக்காளி - 2 எண்ணம்
5. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
6. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
7. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
8. மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
9. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
10. கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
13. கறிவேப்பிலை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. சூடு தண்ணீரில் இறால் மீனைப் போட்டு நன்கு கழுவவும். பின்னர், அதனைக் குளிர்ந்த நீரில் மீண்டும் கழுவி, தனியாக எடுத்து வைக்கவும்.
2. வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்வும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
5. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை கிளறவும்.
6. அதன் பின்பு, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
7. அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
8. பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்த பின்னர், சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை அதில் போட்டு உடையாமல் கிளறி விடவும்.
9. இறால் மற்றும் மசாலா ஒன்றாகச் சேரும் வரை மிதமான நெருப்பில் வைத்திருக்கவும்.
10. இறால் சுருங்கி, வட்ட வடிவில் வந்த பிறகு வாசனைக்காக மல்லித்தழையை தூவி இறக்கி விடவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.