இறால் வறுவல்
சித்ரகலா செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. இறால் மீன் - 1/2 கிலோ
2. மல்லி - 1 தேக்கரண்டி
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. சோம்பு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. இஞ்சி - 1 துண்டு
7. பூண்டு - 3 பற்கள்
8. எலுமிச்சைச் சாறு - சிறிது
9. மிளகாய் வற்றல் - 9 எண்ணம்
10. தயிர் - 1/4 கோப்பை
11. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
12. கருவேப்பிலை - சிறிது
13. நெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
15. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
1. இறாலை நன்கு சுத்தம் செய்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் போட்டு 1/2 மணி நேரம் வைத்திருந்து, தண்ணீரை வடிகட்டி விடவும்.
2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், இறால் மீன், மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக வைக்கவும்.
3. இறால் மீன் வெந்ததும், அதைத் தனியாக ஒரு தட்டில் டுத்து வைக்கவும்.
4. அதேக் கடாயில் மல்லி, மிளகு, சோம்பு, சீரகம் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
5. பிறகு மிளகாய் வற்றலைச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
6. வறுத்து வைத்த அனைத்தையும் மிக்சியில் போட்டு, அதனுடன் இஞ்சி, பூண்டு, எலுமிச்சைச் சாறு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி மசாலாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
7. ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். நெய் சூடானதும் சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
8. பிறகு அரைத்து வைத்த மசாலா மற்றும் தயிர் சேர்த்துக் கிளறி விடவும். பத்து நிமிடம் பச்சை வாசம் போகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
9. பிறகு கருவேப்பிலை, வேக வைத்த இறால் போட்டு ஐந்து நிமிடம் கிளறி விட்டு இறக்கிப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.