மீன் வறுவல்
சித்ரகலா செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மீன் – 1/2 கிலோ
2. சீரகம் – 1 தேக்கரண்டி
3. மல்லி விதை – 1 தேக்கரண்டி
4. மிளகு – 1 தேக்கரண்டி
5. கிராம்பு – 7 எண்ணம்
6. மிளகாய் வற்றல் – 12 எண்ணம்
7. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
9. சிறிய வெங்காயம் – 14 எண்ணம்
10. பூண்டு – 5 பற்கள்
11. எண்ணெய் – தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து வைக்கவும்.
2. கடாயை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி விதை, மிளகு, கிராம்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
3. அதில், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் பொடிதாக அரைத்துத் தனியாக வைக்கவும்.
4. வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. அரைத்து வைத்திருக்கும் மசாலாப் பொடியுடன், இந்த விழுதைச் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
6. கலந்து வைத்துள்ள மசாலாவை மீனுடன் சேர்த்துப் பிசைந்து மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். (குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். கூடுதல் நேரம் ஊற வைத்தால், மசாலா மீனுடன் சேர்ந்து நன்றாக இருக்கும்)
7. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனை, அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து தோசைக்கல்லில் போட்டு வறுத்தெடுக்கவும்.
8. மீன் ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பிப் போட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.