முட்டை மீன் ஆம்லெட்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 5 எண்ணம்
2. மீன் (சதை அதிகம் உள்ளது) - 3 எண்ணம்
3. வெங்காயம் - 2 எண்ணம்
4. தக்காளி - 2 எண்ணம்
5. பச்சைமிளகாய் - 5 எண்ணம்
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. மிளகுத்தூள் - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் நன்கு சதை பகுதி உள்ள மீனைச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன்களை வைத்து, ஆவி வரும் வரை (15 நிமிடம்) வேகவைத்து எடுக்கவும்.
4. வேக வைத்த மீன்களை எடுத்து, பொடிப்பொடியாக மீன் முள்களை நீக்கிவிட்டு உதிர்த்து கொள்ளவும்.
5. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்லிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
6. வதக்கிய கலவையுடன் உதிர்த்து வைத்துள்ள மீனைச் சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.
7. அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
8. பின்னர் இந்த மீன் கலவையை தனியாக எடுத்து வைக்கவும்.
9. ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
10. முட்டையுடன் தயாரித்து வைத்திருந்த மீன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
11. அதனுடன் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்க்கவும்.
12. ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடு ஆனதும். சிறிது எண்ணெயைக் கல்லின் மீது பூசவும்.
13. முட்டை ஆம்லெட் செய்வதற்கான கலவையை எடுத்துக் கல்லில் ஊற்றவும்.
14. ஒரு புறம் வெந்தவுடன், மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.