மீன் முட்டைப் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மீன் முட்டை - 1 கோப்பை
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
4. எண்ணெய் - தேவையான அளவு
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மீன் முட்டையைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்துச் சிவக்க வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
5. அதில் மீன் முட்டையைச் சேர்த்து கிளறவும்.
6. ஐந்து அல்லது ஆறு நிமிடம் மிதமான நெருப்பில் நன்கு வேக விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.