அயிரை மீன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. அயிரை மீன் – 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் – 200 கிராம்
3. தக்காளி – 200 கிராம்
4. புளி – எலுமிச்சம் பழ அளவு
5. மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
6. தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
7. மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
8. பூண்டு – 6 பல்
9. உப்பு – தேவையான அளவு
10. நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
11. கடுகு, வெந்தயம் – சிறிது
12. கறிவேப்பிலை – சிறிது
13. பால் - 200 மி.லி. (மீன் உயிருடன் இருந்தால் மட்டும்)
13. தேங்காய் - அரை மூடி (தேங்காய் விரும்புபவர்களுக்கு மட்டும்)
முன் குறிப்பு:
1. அயிரை மீன் உயிருடன் இருந்தால், ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் அயிரை மீனைப் போட்டு 2 மணி நேரம் வைத்திருக்கவும்.பாலைக் குடித்த மீன்கள் சிறிது பெரிதாகி இருக்கும்.இந்த மீனைக் கொண்டு வைக்கும் குழம்பு சுவையாக இருக்கும்.
2. ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டு அதில் அயிரை மீனைப் போட்டு நான்கு அல்லது ஐந்து முறை பாத்திரத்தோடு சேர்த்துத் தேய்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
2. அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
3. அடி கனமான வாணலியில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வெந்தயம் போட்டுத் தாளிக்கவும்.
4. நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. அத்துடன் பூண்டைத் தட்டிச் சேர்த்து நன்கு கிரேவியாக வரும் வரை வதங்கிய உடன் கரைத்த புளிக்கரைசல் மசாலாவைச் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.
6. மசாலாக் கலவை கொதித்ததும், மீனைப்போட்டு மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.
7. கிராமிய மணமும் சுவையும் கொண்ட சுவையான அயிரை மீன் குழம்பு தயார்.
குறிப்பு:
சிலர் சுவைக்காகத் தேங்காய் சேர்ப்பது வழக்கம்.தேங்காயை அரைத்துப் பாலெடுத்து மசாலா கொதி வரும்போது ஊற்றவும்.நன்றாகக் கொதித்து நுரை போன பின் அயிரை மீனைப் போட்டு இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.