கருவாடு மசால்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
2. தக்காளி (சிறியது) - 1 எண்ணம்
3. நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
4. பச்சை மிளகாய் - 5 எண்ணம்
5. நெய் மீன் கருவாடு - 50 கிராம்
செய்முறை:
1. முதலில் கருவாட்டைக் கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றைச் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெங்காயம் சேர்த்து வதங்கிய பிறகு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. வதங்கிய பிறகு கருவாடு உள்ளே வைத்து மேலே வெங்காயத்தைப் போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.