மீன் முட்டை மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மீன் முட்டை - 100 கிராம்
2. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
3. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. மீன் முட்டையை சுத்தம் செய்து, நீரை வடித்து எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
2. தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் எண்ணெய் சேர்த்து ஊற வைத்த மீன் முட்டை மசாலாவை தோசைக்கல்லில் ஊற்றி பரப்பிவிட்டு, ஆம்லெட் போல இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.