மிளகு மீன் மசாலா
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. மீன் - 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. பூண்டு - 8 பற்கள்
4. தக்காளி - 3 எண்ணம்
5. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
6. கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
8. மிளகுத்தூள் - 2 மேசைக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1 1/2 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
1. மீன் துண்டுகளை சிறிது 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்து , பின்னர் அதனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
2. நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து சிறிய அளவிலான நெருப்பில் பச்சை வாசனை போக வதக்கவும்.
4. நன்றாக வதங்கிய பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்துக் கலந்து அதில் மீன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், மேலும் சிறிது நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து சிறிய அலவிலான நெருப்பில் ஐந்து நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.