கட்லா மீன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கட்லா மீன் - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் (உரித்தது) - 15 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 20 எண்ணம்
4. புளி - 50 கிராம்
5. தேங்காய் - 1
6. சீரகம் - 15 கிராம்
7. நல்லெண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு
முன் குறிப்பு:
1. மீனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
2. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
3. தேங்காய், சீரகம் மற்றும் மிளகாய் வற்றலை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
1. சின்ன வெங்காயத்தை இலேசாக அரைக்கவும்.
2. அடி கனமான பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் சின்ன வெங்காயம், அரைத்த கலவை மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
3. அதனுடன் தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. கொதி வந்ததும் சுத்தம் செய்த மீன் துண்டுகளை அதில் சேர்க்கவும்.
5. குறைந்த தீயில் வைத்து, பாத்திரத்தை மூடி மீனை 20 நிமிடங்கள் வரை வேக விட்டு இறக்கவும்.
குறிப்பு:
கெண்டை, கெளிறு போன்ற ஆறு/குளத்து மீன்கள் அனைத்தையும் எளிமையான இந்தக் கிராமத்து முறையில் மீன் குழம்பாகச் செய்தால் நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.