மீன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. 1. மீன் – 1 /2 கிலோ (விருப்பமான மீன்)
2. புளி – எலுமிச்சை அளவு
3. பூண்டு – 15 பல்
4. சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
5. தக்காளி – 1 எண்ணம்
6. மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
8. மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
9. தேங்காய் துருவியது – 1 /4 கப்
10. மிளகு – 10 எண்ணம்
11. சீரகம் – 2 1/2 தேக்கரண்டி
12. சீரகம் – 1 /2 தேக்கரண்டி
13. மிளகு – 1 /2 தேக்கரண்டி
14. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
15. நல்லெண்ணெய் – 1 /4 கப்
16. கருவேப்பிலை – தேவையான அளவு
17. உப்பு – தேவையான அளவு
முன் குறிப்பு:
1. மீனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
2. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
3. தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
1. புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
2. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. மீனைப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
5. அதன் பிறகு பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
6. தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
7. அத்துடன் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
8. நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
9. மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.