மீன் மசாலா வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மீன் – 10 துண்டுகள்
2. இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
3. சிறிய வெங்காயம் – 8 எண்ணம்
4. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
5. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
6. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
8. மைதா – 4 தேக்கரண்டி
9. எலுமிச்சம்பழச் சாறு – 2 தேக்கரண்டி
10. கருவேப்பிலை – தேவையான அளவு
11. மல்லிதழை – தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு
13. எண்ணெய் – தேவையான அளவு
முன் குறிப்பு:
1. மீனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
செய்முறை:
1. வெங்காயம், கருவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
2. எலுமிச்சம்பழச் சாறு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, அரைத்த மசாலா சேர்த்துக் கெட்டியாக மசாலா செய்து கொள்ளவும்.
3. மீன் துண்டின் இரு புறங்களிலும் மசாலாக் கலவையை தடவி, அதன் மேலே மைதா மாவை தூவி 1 மணி மேரம் வரை ஊற வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், மிதமான சூட்டில் மீனை இரு புறமும் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
எண்ணெய் குறைவாகப் பயன்படுத்திப் பொரிக்க விரும்புபவர்கள் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பொரித்தெடுக்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.