கருவாட்டுப் பொறியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கருவாடு - 100 கிராம்.
2. சின்னவெங்காயம் - 15 எண்ணம்.
3. பூண்டு - 2 பற்கள்.
4. மிளகாய்வற்றல் - 4 எண்ணம்.
5. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி.
7. உப்பு - தேவையான அளவு.
8. கறிவேப்பிலை - சிறிது.
முன் குறிப்பு:
1. கருவாட்டைத் தண்ணீரில் சுத்தம் செய்து முள் நீக்கி உதிர்த்து வைத்துக் கொள்ளவும். (வேக வைத்தும் முள் நீக்கலாம்).
செய்முறை:
1. சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை அரைகுறையாக அரைக்கவும். (இடிகல்லில் இடித்தும் பயன்படுத்தலாம்)
2. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சிறிது கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அரைத்து வைத்த கலவையுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
3. பாதி வதங்கியதும் உதிர்த்த கருவாட்டையும், மஞ்சள் தூளையும் சேர்த்துக் கிளறவும்.
4. குறைவான நெருப்பில் வெந்ததும் இறக்கவும்.
குறிப்பு:
நெய்மீன் கருவாடு கிடைத்தால் நன்றாக இருக்கும். நெய்மீன் கிடைக்காத நிலையில் துண்டுகளாகக் கிடைக்கும் வேறு கருவாடுகளையும் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.