இறால் நூடுல்ஸ்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நூடுல்ஸ் – 200 கிராம்
2. இறால் – 100 கிராம்
3. முட்டை – 2 எண்ணம்
4. கோஸ், கேரட், பச்சைப் பட்டாணி, குடை மிளகாய் – ஒரு கிண்ணம்
5. சோயா சாஸ் – 1 மேசைக் கரண்டி
6. தக்காளி சாஸ் – 1 மேசைக் கரண்டி
7. வினிகர் – 1/2 மேசைக் கரண்டி
8. ரெட் ஹாட் சாஸ் – 1 மேசைக் கரண்டி
9. மிளகுத்தூள் – தேவையான அளவு
10. உப்பு – சிறிது
11. சீனி – 1 சிட்டிகை
12. ந.எண்ணெய் – 1 மேசைக் கரண்டி
13. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நூடுல்ஸ் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்
2. பிறகு தண்ணீரை வடிகட்டி நூடுல்ஸ்சை தனியாக வைக்கவும்
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் காய்கறிகளைப் போட்டு வதக்கவும் அதில் எல்லா சாஸ் வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
4. அதே சட்டியில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதில் தேவைக்கு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
5. முட்டை உதிர்ந்த பின்பு இறால், நூடுல்ஸ் சேர்த்து நன்றாகக் கிண்டிவிட்டு இறக்கவும்
6. இறக்கிய நூடுல்ஸ் மீது மல்லித்தழை தூவி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.