மீன் சொதி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மீன் - 500கிராம்
2. பச்சைமிளகாய் - 5எண்ணம்
3. பெரியவெங்காயம் - 50 கிராம்
4. கறிவேப்பிலை - சிறிது
5. வெந்தயம் - 1 மேஜைக்கரண்டி
6. பெருஞ்சீரகம் - 2 மேஜைக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
8. தேங்காய்பால் - 1 கப்
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பச்சைமிளகாய், வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரைக் கொதிக்க வைத்து அதில் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும்.
3. இந்தக் கலவையில் துண்டுகளாக்கிய மீனைச் சேர்த்து தேவையான அளவு வேகவைக்கவும்.
4. மீன் ஓரளவு வெந்ததும் அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு இலேசாகக் கொதிக்க விட்டுப் பின் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.