மத்தி மீன் வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மத்தி மீன் - 1/2 கிலோ
2. சிறிய வெங்காயம் - 5 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
5. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
6. சீரகத்தூள் - 1/2 கரண்டி
7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
8. கடலை மாவு - 1மேசைக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மீனைச் சுத்தமாக்கி வைக்கவும். மீனின் இருபுறமும் இலேசாகக் கீறிவிட்டுக் கொள்ளவும்.
2. மசாலா மீன் வயிறு மற்றும் எல்லா இடமும் படுமாறு கலந்து வைக்கவும்.
3. சிறிய வெங்காயம், தக்காளியை அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், இஞ்சிப்பூண்டு விழுது, கடலைமாவு, உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.
4. இந்தக் கலவையை மீனின் இருபுறமும் சேர்த்து உணர வைக்கவும்.
5. ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கருவேப்பிலை சிறிது போட்டு அதில் மசாலா சேர்த்து உணர வைத்திருக்கும் மீனைச் சேர்க்கவும்.
6. மீனின் இருபுறமும் சிவக்கும்படி வேகவிட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.