செட்டிநாடு மீன் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மீன் – 10 துண்டுகள்
2. தக்காளி – 5 எண்ணம்
3. சின்ன வெங்காயம் – 20 எண்ணம்
4. பூண்டு – 10 பற்கள்
5. மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
6. சாம்பார் தூள் -1 மேசைக்கரண்டி
7. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
10. சோம்பு - 1/2 தேக்கரண்டி
11. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
12. புளி - சிறிய எலுமிச்சை அளவு
13. உப்பு – தேவையான அளவு
14. கறிவேப்பிலை – சிறிது
15. மல்லித்தழை – சிறிது
16. நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, கழுவி வைத்துக் கொள்ளவும்.
2. பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டிச் சில நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
3. வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
4. புளியைச் சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சோம்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
6. அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
7. அத்துடன் சீரகப் பொடி மற்றும் உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
8. தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், சாம்பார் தூள் சேர்த்துத் தேவையான தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்தப் புளிச்சாறு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
9. கடைசியாக மீன் துண்டுகளைச் சேர்த்துக் குறைவான நெருப்பில் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
10. மீன் நன்கு வெந்ததும், கொதிக்க விட்டு இறக்கிக் மல்லித்தழையைத் தூவி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.