மீன் கட்லட்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மீன் - 300 கிராம் (சீலா, இரால், வாவல், வாளை, பிள்ளைச் சிரா, விரால் போன்றவையாக இருந்தால் நல்லது)
2. உருளைக்கிழங்கு - 150 கிராம்
3. பெரிய வெங்காயம் - 100 கிராம்
4. தேங்காய் - பாதி
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. பட்டை, கிராம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. முட்டை - 1
8. பூண்டு - 7 பல்
9. ரஸ்க் தூள்- தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. இஞ்சி - தேவையான அளவு
12. மல்லித்தழை - தேவையான அளவு
13. புதினாத்தழை - தேவையான அளவு
14. நல்லெண்ணெய் -- தேவையான அளவு
செய்முறை:
1. மீனை ஆவியில் வேகவைத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். (முள்ளிருக்கும் மீன்களாயிருந்தால் முள்ளை அகறி விடவும்)
2. உருளைக் கிழங்கை வேகவைத்து உதிர்த்து வைக்கவும்.
3. மீன், உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், கரிமசால்தூள், அரத்த தேங்காய், முட்டையின் மஞ்சள் கரு, உப்பு சேர்த்துப் பிசையவும்.
4. பொடியாக வெட்டப்பட்ட வெங்காயம், இஞ்சி, பூண்டு, மல்லித்தழை, புதினா இலை போன்றவற்றை எண்ணெய்யில் வதக்கி வைக்கவும்.
5. இந்த வதக்கலை மீன் கலவையில் கலந்து வட்டமாகத் தட்டி முட்டையின் வெள்ளைக்கருவில் தோய்த்து ரஸ்க்தூளில் புரட்டி சூடாக்கப்பட்ட நல்லெண்ணையில் பொரித்து எடுக்கவும்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.