சாளை மீன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சாளை மீன் - 15 எண்ணம்
2. மிளகாய் வற்றல் -3 எண்ணம்
3. மல்லி - 3 மேசைக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. மிளகு-1 தேக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 4 மேசைக்கரண்டி
7. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
8. கடுகு -1/2 தேக்கரண்டி
9. உளுந்தம்பருப்பு -1/2 தேக்கரண்டி
10. வெந்தயம் -1/2 தேக்கரண்டி
11. வெங்காயம் - 5 எண்ணம்
12. புளி - சிறிய எலுமிச்சை அளவு
13. கறிவேப்பிலை - சிறிது
14. உப்பு - தேவையான அளவு
15. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி .
செய்முறை:
1. சாளை மீனைச் சுத்தமாகக் கழுவி வைக்கவும்.
2. புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் மிதமான சூட்டில் மிளகாய் வற்றல், மல்லி, மிளகு என அனைத்தையும் சேர்த்து இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
4. வறுத்த பொருட்களுடன் சீரகம், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.
5. வறுத்துக் கிளறிய பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளித்துக் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றவும்.
8. புளித் தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
9. மசாலா வாடை போனதும் மீன்களை சேர்த்து வேக விட்டு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.