மீன் பிரியாணி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மீன் – 1/4 கிலோ
2. பாசுமதி அரிசி – 100 கிராம்
3. பொன்னி அரிசி - 200 கிராம்
4. வெங்காயம் – 150 கிராம்
5. தக்காளி – 150 கிராம்
6. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
7. இஞ்சிப் பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
8. புதினா, கொத்தமல்லி இலை – சிறிது
9. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
10. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
11. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
12. பட்டை - சிறிது
13. இலவங்கம் - சிறிது
14. தயிர் – 1 கப்
15. உப்பு – தேவையான அளவு
16. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. மீனை சுத்தம் செய்து முள் நீக்கி விடவும்.
2. வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
3. ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, இலவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.
4. வெங்காயம், இஞ்சிப் பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
5. தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
6. அந்தக் கலவையுடன் பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், பொன்னி அரிசி 2 பங்கும் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
7. நன்கு வெந்ததும், தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.