வஞ்சிரம் மீன் வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வஞ்சிரம் மீன் – 1/2 கிலோ
2. இஞ்சிப் பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
3. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
4. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
6. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
7. சோம்புத்தூள் – 1/4 தேக்கரண்டி
8. மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
9. கான்ப்ளவர் மாவு – 1 மேசைக்கரண்டி
10. கடலைமாவு – 1 மேசைக்கரண்டி
11. மல்லித்தழை - சிறிது
12. புதினா – சிறிது
13. கறிவேப்பிலை – சிறிது
14. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
15. எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
16. கரம்மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி
17. உப்பு – தேவையான அளவு
18. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. வஞ்சிரம் மீன் துண்டுகளை நன்றாக அலசி முள் இல்லாமல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கிய மீன் துண்டுகளுடன் சிறிது மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு கலந்து சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றுடன் இஞ்சிப் பூண்டு விழுது, கான்ப்ளவர் மாவு, கடலைமாவு போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும்.
4. இந்தக் கலவையுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை போட்டுக் கலக்கவும்.
5. இந்த மசாலாக் கலவையில் மீன் துண்டுகளைப் போட்டு மீனின் இருபுறமும் மசாலா இருக்கும்படி விரவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மசாலாவில் ஊற வைத்த மீன்களைப் போட்டு வேகவிடவும், ஒரு புறம் வெந்த பின்பு மறுபுறமும் பிரட்டி நன்கு வேக வைத்து எடுக்கவும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.