மத்தி மீன் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மத்தி மீன் - 3/4 கிலோ
2. மிளகு -2 தேக்கரண்டி
3. சீரகம் - 2 தேக்கரண்டி
4. சோம்பு -1 தேக்கரண்டி
5. இஞ்சி - 25 கிராம்
6. பூண்டு - 20 பல்
7. எலுமிச்சைச் சாறு-2 தேக்கரண்டி
8. தயிர் -1 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. மத்தி மீனை நன்கு சுத்தம் செய்து செய்யவும்.
2. மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3. தனியாக இஞ்சி, பூண்டை விழுது போல் நன்கு அரைத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சிப் பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சைச் சாறு, தயிர் மற்றும் உப்பு போட்டு நன்கு மசாலாவாகக் கலந்து வைக்கவும்.
5. சுத்தம் செய்த மத்தி மீனை கலந்து வைத்த மசாலாவில் நன்கு தடவிக் குறைந்தது மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மசாலா பிசறிய மீனை அதில் போட்டு மிதமான நெருப்பில் வேகவிடவும்.
7. மீன் ஒருபுறம் வெந்ததும், அந்த மீனை உடைந்து விடாமல் திருப்பிப் போட்டு வேகவிடவும்.
8. அனைத்து மீன்களையும் வறுத்துத் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
9. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலையைப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
10. வறுத்து வைத்துள்ள மீன்களின் மேல் கறிவேப்பிலையை மேலாகத் தூவிப் பறிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.