இறால் மசாலா வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. இறால் - 200 கிராம் (தோல் நீக்கிச் சுத்தம் செய்தது)
2. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
3. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. இஞ்சிப் பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
6. சோள மாவு - 1/2 தேக்கரண்டி
7. அரிசி மாவு - 1/2 தேக்கரண்டி
8. எலுமிச்சை சாறு - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், இஞ்சிப் பூண்டு விழுது, சோள மாவு, அரிசி மாவு, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றைப் போட்டுச் சிறிது தண்ணீர் ஊற்றிப் பஜ்ஜி மாவு பதத்திற்குக் கலந்து வைக்கவும்.
2. தோல் நீக்கிச் சுத்தம் செய்த இறாலைப் போட்டுக் கிளறி ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மசாலாவில் ஊறிய இறாலைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.