அரைத்து வைக்கும் மீன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மீன் - 1/2 கிலோ
2. புளி- சிறு எலுமிச்சை அளவு
3. சின்ன வெங்காயம் - 7 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பூண்டு - 5 பற்கள்
6. உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க
7. மல்லி - 3 மேசைக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 7 எண்ணம்
9. மிளகு - 1/2 தேக்கரண்டி
10. சீரகம் - 1/2 தேக்கரண்டி
11. மஞ்சள் - சிறு துண்டு
12. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
13. தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
தாளிக்க
14. நல்லெண்ணெய் - தேவையான அளவு
15. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
16. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. மீன் துண்டுகளைச் சுத்தம் செய்து, உப்பு போட்டு நன்றாகக் கழுவி வைக்கவும்.
2. புளியைச் சிறிது தண்ணிரில் ஊற வைக்கவும்.
3. வறுத்து அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களில் மஞ்சள் தவிர்த்து, அனைத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியாகச் சிவக்க வறுக்கவும்.
4. அவை ஆறியதும், அதனுடன் மஞ்சள், சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
5. வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் தாளிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
8. அனைத்தும் நன்கு வதங்கியதும், புளிக்கரைசலை ஊற்றி, அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து, மூடி போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
9. குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்தாற் போல் வரும் போது மீன் துண்டுகளைச் சேர்த்து, மிதமான நெருப்பில் கொதிக்க விடவும்.
10. ஒரு கொதி வந்தவுடன் மீன் துண்டுகளைத் திருப்பிவிட்டு,மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.