இறால் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. இறால் – 250 கிராம்
2. தேங்காய் – 1 மூடி
3. வெங்காயம் – 100 கிராம்
4. தக்காளி – 100 கிராம்
5. இஞ்சி,பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
6. எலுமிச்சம் பழம் – 2 எண்ணம்
7. பச்சை மிளகாய் – 5 எண்ணம்
8. எண்ணெய் – தேவையான அளவு
9. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. இறாலைச் சுத்தம் செய்து எலுமிச்சம் பழச் சாற்றில் ஊற வைக்கவும்.
2. தேங்காயைத் துருவி, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பாலாக அரைத்து வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும்.
5. அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
6. அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலைச் சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் தேங்காய்ப் பால் ஊற்றித் தேவையான உப்பு சேர்த்து, இறாலை நன்கு வேக வைக்கவும்.
8. இறால் நன்றாக வெந்ததும் இறக்கி, மேலாக மல்லித்தழையை தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.