கிராமத்து மீன் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. விரால்/கட்லா/கெண்டை மீன் - 500 கிராம்
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 150 கிராம்
4. பூண்டு - 50 கிராம்
5. மிளகாய் - 10 எண்ணம்
6. மல்லி - 1 மேசைக்கரண்டி
7. வெந்தயம் - 2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
9. சோம்பு - 2 தேக்கரண்டி
10. சீரகம் - 2 தேக்கரண்டி
11. மிளகு - 1/4 தேக்கரண்டி
12. புளி - சிறு எலுமிச்சை அளவு
13. கடுகு சிறிது
14. நல்லெண்ணய் - தேவையான அளவு
15. உப்பு - தேவையான அளவு
16. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. மீனைத் துண்டுகளாக்கிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும், பூண்டைத் தட்டி வைக்கவும்.
3. புளியைக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணய் விட்டு சீரகம், மிளகு, மல்லி, மிளகாய், பூண்டு, சோம்பு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கனமான பாத்திரத்தில் 100 மி.லி நல்லெண்ணயை விட்டுக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம, கறிவேப்பிலையைப் போட்டுத் தாளித்து அதில் நறுக்கிய வெங்காயத்தைக் கொட்டிச் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் , அரைத்த மசாலாவைக் கலந்து வதக்கவும்.
7. அதில் புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பதினைந்து நிமிடம் கொதிக்க விடவும்.
8. பிறகு கழுவிச் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி மூடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.