நெத்திலி வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நெத்திலி மீன் - 1 கப்
2. மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
3. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
4. எலுமிச்சை சாறு - 1தேக்கரண்டி
5. உப்பு - சிறிது
6. மஞ்சள் தூள் - சிறிது
7. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. நெத்திலி மீனைச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. அனைத்து மசாலாத்தூள்களையும் கலந்து எலுமிச்சை சாறு விட்டுப் பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மசாலா பிரட்டிய மீனை நீர் இல்லாமல் எடுத்து போட்டு பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.