இறால் மீன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. இறால் - 300 கிராம்
2. வெங்காயம் - ஐம்பது கிராம்
3. பூண்டு - மூன்று பல்
4. தக்காளி - 100 கிராம்
5. மிளகாய்த்தூள் - இரண்டு மேசைக் கரண்டி
6. மல்லித்தூள் - ஒரு மேசைக் கரண்டி
7. மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
8. சோம்பு - ஒரு தேக்கரண்டி
9. சீரகம் - சிறிது
10. தேங்காய்த் துருவல் - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
12. புளி - தேவையான அளவு
13. எண்ணை - தேவையான அளவு
14. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. இறால் மீனைக் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. தேங்காய், சீரகத்தை சோம்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதில் இறால் மீனைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. இறால் மீன் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. நறுக்கி வைத்த தக்காளியுடன் கரைத்த புளிக்கரைசலை இறால் மீன் வதக்கலுடன் சேர்க்கவும்.
6. பின் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதி வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.