வாழை இலை மீன் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மீன் – 1 கிலோ
2. தயிர் – 4 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
4. நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
5. தேங்காய்ப் பால் – 3 மேசைக்கரண்டி
6. வாழை இலைத் துண்டுகள் - சிறிது
7. உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
8. புதினா – 1 கைப்பிடியளவு
9. மல்லித்தழை – 1 கைப்பிடியளவு
10. பூண்டு – 6 பல்
11. இஞ்சி – 1 துண்டு
12. பச்சை மிளகாய் – 6 எண்ணம்.
செய்முறை:
1. மீனை நன்றாகச் சுத்தம் செய்து, இருபுறமும் கத்தியால் கீறி விடவும்.
2. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்து வைக்கவும்.
3. அரைத்த மசாலாவில் உப்பு, தேங்காய்ப்பால், எண்ணெய் சிறிது சேர்த்து கலந்து மீனில் தடவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
4. வாழை இலையில் மசாலாவில் ஊறவித்த மீன் துண்டை உள்ளே வைத்து வெளியே தெரியாதவாறு மடிக்கவும்.
5. டூத் பிக் குச்சியில் குத்தி தோசைக்கல்லில் மிதமான சூட்டில் வைத்து மூடி வைக்கவும்.
6. இலை அதிகம் கருகுவதற்கு முன் எடுத்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.