தேங்காய் மீன் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மீன் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
2. தேங்காய் - 1 எண்ணம்
3. சின்ன வெங்காயம் - 4 எண்ணம்
4. பூண்டு - 5 பல்
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. மிளகு - 1/2 தேக்கரண்டி
7. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
8. ஓமம் - 1/4 தேக்கரண்டி
9. தனியா தூள் - 4 தேக்கரண்டி
10. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
11. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
12. புளி - நெல்லிக்காய் அளவு
13. உப்பு - தேவையான அளவு
14. கடுகு - 1/2 தேக்கரண்டி
15. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
16. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. சுத்தம் செய்த மீனைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
2. புளியை 150 மி.லி நீரில் ஊற வைக்கவும்.
3. தேங்காயுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, வெந்தயம், ஓமம், தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் மீனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும்.
5. அதனுடன் ஊற வைத்திருக்கும் புளியைக் கரைத்து வடிகட்டிய நீர், 400 மி.லி. நீர் மற்றும் உப்பைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
6. நன்கு வைத்து கொதித்த பின்பு தீயைக் குறைத்து சில நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து குழம்பை வற்ற விடவும்.
7. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து குழம்பில் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.