இறால் மிளகு வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. இறால் - 250 கிராம்
2. பூண்டு - 6 பல்
3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
4. மிளகு - 15 எண்ணம்
5. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
7. தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிதளவு
9. உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
1. சுத்தம் செய்த இறாலுடன், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. அதனுடன் ஊறவைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி மூடிபோட்டு வேகவிடவும். (இறாலில் ஏற்கெனவே தண்ணீர் இருப்பதால் மீண்டும் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை)
4. இறால் நன்றாக வெந்ததும் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துத் தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.