காரல் மீன் சொதி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காரல் மீன் - 1/2 கிலோ
2. தேங்காய்- அரை முடி
3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
4. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
5. சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
7. சின்ன வெங்காயம் - 5 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
9. சின்ன வெங்காயம் - 2 எண்ணம்
10. சோம்பு - 1 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. தேங்காயைத் துருவி, அதனை மிக்சியில் அரைத்து இரண்டு முறை பால் எடுக்கவும்.
2. இரண்டாவது முறையாக எடுத்தத் தேங்காய்ப்பாலுடன், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், சுத்தம் செய்த காரல் மீனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
3. நன்றாகக் கொதித்து வந்ததும், முதலில் எடுத்தத் தேங்காய்ப் பாலைச் சேர்த்து இறக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளித்துச் சொதியில் ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.