இறால் மீன் புலவு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 2 எண்ணம்
2. சின்ன வெங்காயம் - 4 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 6 எண்ணம்
4. பூண்டு - 6 பல்
5. இஞ்சி - சிறிது
6. தனியா தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு
10. நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
11. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. சுத்தம் செய்த மீனைத் துண்டுகளாக்கி உப்பு சேர்த்து, வேக வைக்கவும்.
2.வெங்காயத்தை நீளமாக நறுக்கி எண்ணெய்யைக் காய வைத்து வதக்கவும்.
3. பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சிறிதாக நறுக்கி அத்துடன் தனியாத் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் 100 மி.லி. தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
4. கொதிநிலையில் இறாலைப் போட்டு மசாலா கெட்டியாகும் வரை வேக வைத்து இறக்கி வைக்கவும்.
5. புலவுக்கான அரிசியைக் களைந்து, தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து வடிக்கவும்.
6. சோறாகி விட்ட நிலையில், அதில் இறால் மசாலாவைச் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இறால் மீன் புலவு தயார்.
7. தக்காளியை வட்டம் வட்டமாக நறுக்கியும், கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கியும் வைத்துக் கொண்டு புலவின் மேல் அலங்கரித்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.