கருவாட்டு மசாலா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கருவாடு- 100 கிராம்
2. சின்ன வெங்காயம் -150 கிராம்
3. தக்காளி -100 கிராம்
4. பூண்டு -15 பல்
5. புளி - எலுமிச்சை அளவு
7. மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
8. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு-தேவையான அளவு
தாளிக்க
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. உளுந்து - 1/2 தேக்கரண்டி
10. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
11. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
12. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. கருவாட்டைச் சுடு தண்ணீரில் கழுவி எடுத்து வைக்கவும்.
2. ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிப் புளியைக் கரைத்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சுத்தம் செய்த கருவாட்டைப் போட்டு பொறித்து எடுத்துத் தனியாக வைக்கவும்.
4. வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
6. அதில் மிளகாய் பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றைப் போட்டு வதக்கி விடவும்.
7. பின்னர் அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
8. பின் கருவாட்டையும் போட்டு கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
9. கருவாட்டின் பச்சை வாசம் போய் குழம்பு பதம் வந்தவுடன் இறக்கவும்.
குறிப்பு: கருவாட்டில் உப்பு இருக்கும் என்பதால், உப்பை சரி பார்த்துப் போடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.