இறால் மஞ்சூரியன்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. இறால் – 250 கிராம்
2. சில்லி பிளேக்ஸ் – சிறிதளவு
3. வெங்காயத்தாள் – தேவைக்கேற்ப
4.பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
5. குடைமிளகாய் – 1 எண்ணம்
6. பூண்டு – 5 பல்
7. மிளகாய் சாஸ் – 1 தேக்கரண்டி
8. தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி
9. சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
10. மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
11. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. இறாலைக் கழுவிச் சுத்தம் செய்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
2. பெரிய வெங்காயம், குடை மிளகாய் போன்றவற்ற நறுக்கி வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் இறாலை போட்டுப் பொரித்தெடுத்துத் தனியாக வைக்கவும்.
4. பின்னர் அதே வாணலியில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
5. அடுத்து, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சில்லி பிளேக்ஸ், உப்பு போன்றவற்றைக் கலந்து பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கவும்.
7. அதன் பிறகு குடைமிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து லேசாக வதக்கவும்.
8. பொறித்து வைத்திருக்கும் இறாலை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.