சாளை மீன் வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சாளை மீன் - 10 எண்ணம்
2. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. எலுமிச்சைச் சாறு - 2 மேசைக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. மீனின் தலைப்பகுதி, வால் பகுதி இரண்டையும் நீக்கிவிட்டு நன்றாகச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மூன்றையும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக வைத்துக் கொள்ளவும்.
3. விழுதை மீனின் மீது நன்கு தடவிக் குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து மீன்களைப் போடவும்.
5. சிறிது நேரம் கழித்து மீனைத் திருப்பி போட்டு வறுக்கவும்.
6. இரண்டு புறமும் நன்கு சிவந்ததும் எடுத்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.